கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் இடங்களில் புகை விசிரும் நடவடிக்கை ஆரம்பம்

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் இடங்களில் புகை விசிரும் நடவடிக்கை ஆரம்பம்

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் இடங்களில் புகை விசிரும் நடவடிக்கை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

27 Jun, 2016 | 1:23 pm

கொழும்பு மாவட்டத்தில் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ள பகுதிகளில் புகை விசிரும் நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்காக 60 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் தொற்று நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஹசித்த திஸர தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு அதிகமாக ஒருவருக்கு காய்ச்சல் நீடிக்குமாயின் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 31 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

19,731 டெங்கு நோயாளர்கள் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இனங்காணப்பட்டுள்ளதுடன், இதில் 47.61 வீதம் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொலண்ணாவ, கடுவெல, கம்பஹா, தெஹிவளை மற்றும் கல்கிஸை ஆகிய பகுதிகளில் அதிகமாக டெங்கு நுளம்புகள் பரவும் பகுதியாக இனங்காணப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக கடுவெல, கொலண்ணாவ, பியகம, ஜாஎல மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இந்த மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் அடுத்துவரும் 3 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வௌ்ளத்தின் பின்னர் குப்பைகளினால் நிரம்பிய வடிகாண்களை துப்பரவு செய்யும் நடவடிக்ககைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்