எந்தவொரு இராணுவ உறுப்பினரும் நிர்க்கதியாவதற்கு இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி

எந்தவொரு இராணுவ உறுப்பினரும் நிர்க்கதியாவதற்கு இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

27 Jun, 2016 | 7:53 pm

எந்தவொரு இராணுவ உறுப்பினரும் நிர்க்கதியாவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

விருசர ரணவிரு அட்டை வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்டத்தின் அங்குரார்ப்பண வைபவத்தின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஹிங்குரக்கொட ரஜரட்ட கல்லூரியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

1983 ஆம் ஆண்டு தொடக்கம் 1999 ஆம் ஆண்டு வரை முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய உறுப்பினர்கள் மற்றும் இந்தக் காலப்பகுதிக்குள் உயிரிழந்த இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் விருசர அட்டை வழங்கி வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின், இரண்டாம் கட்டத்திற்கென மூன்று இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் துறையில் 55 நிறுவனங்களில் இந்த விருசர அட்டையூடாக நன்மை பெறமுடியும்.

வட மத்திய மாகாணங்களிலுள்ள படையினருக்கான வீட்டுக் கடன் வழங்கும் திட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் , வீட்டுக் கடன் வழங்கும் திட்டமும் ஜனாதிபதியால் இதன் போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்