நளினியை முற்கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரம் தமக்கில்லை – தமிழக அரசு

நளினியை முற்கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரம் தமக்கில்லை – தமிழக அரசு

நளினியை முற்கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரம் தமக்கில்லை – தமிழக அரசு

எழுத்தாளர் Staff Writer

25 Jun, 2016 | 9:15 am

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நளினியை முற்கூட்டியே விடுதலை செய்வதற்கான அதிகாரம் தமக்கு இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தம்மை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவிற்கு பதில் வழங்குமாறு உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, தமிழக அரசின் உள்துறை துணை செயலாளர் டேனியல் ஆஜரானதுடன், பதில் மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

20 வருடங்கள் சிறையில் உள்ளவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு, நளினி வழக்கில் பொருந்தாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பிவ் மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழக அரசு எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்