தகவல் அறியும் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

தகவல் அறியும் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

தகவல் அறியும் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2016 | 9:03 am

தகவல் அறியும் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

சட்டமூலம் தொடர்பில் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இந்நிலையில் தகவல் அறியும் சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு பல்வேறு தடைகள் காணப்படுவதாகவும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் சட்டமூலத்தின் மூலம் நல்லாட்சியினதும், நாட்டினதும் செயற்பாடுகளையும் மேலும் மேம்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த சட்டமூலத்தின் மூலம், பொது நிர்வாக நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் கயந்த கருணாதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பிரகாரம், பிரஜை ஒருவருக்கு ஏதும் நிறுவனத்தின் உடமை அல்லது அதன் கட்டுப்பாட்டிலுள்ள தகவலைப் பெற உரிமை வழங்கப்படுகின்றது.

இதேவேளை, ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள், தேசிய நலன் தொடர்பான தகவல்கள், நாட்டின் சர்வதேச உறவுகளுடன் தொடர்புள்ள தகவல்கள், வரி விதிப்புகள், ஒருவருக்கு எதிராக வழக்கு தொடர்வதை தடுக்கும் தகவல்கள், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான தகவல்கள், பரீட்சை திணைக்கள அல்லது, உயர்கல்வி நிறுவன பரீட்சைகளுக்கு இடையூறான தகவல்கள் என்பன வழங்குவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்