சொந்தமாக ஓர் கல் வீடு எனும் கனவு கலைந்து போகுமா இந்த 105 வயது மூதாட்டிக்கு?

சொந்தமாக ஓர் கல் வீடு எனும் கனவு கலைந்து போகுமா இந்த 105 வயது மூதாட்டிக்கு?

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2016 | 10:42 pm

சொந்தமாக ஓர் கல் வீடு வேண்டும் எனும் கனவோடு 105 வயதைக் கடந்துவிட்ட மூதாட்டி ஒருவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரை பகுதியில் வாழ்ந்து வருகிறார்.

வேலாப்போடி சின்னத்தங்கம் எனும் இந்த மூதாட்டி 1912 ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.

தற்போது போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் விவேகானந்தபுரத்தில் வசித்து வரும் இவர் 180 பேரப்பிள்ளைகளைக் கண்டுள்ளார்.

இருப்பினும், அவரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவோ கனவை நிறைவேற்றவோ எவரும் உதவி புரியவில்லை.

ஓலைக் குடிசையிலேயே வாழ்நாளைக் கடத்திவிட்ட இவருக்கு, இறுதித் தருணத்திலாவது கல் வீட்டில் வாழ்ந்துவிட வேண்டும் எனும் ஆசை நிறைந்திருக்கிறது.

இவர் சூறாவளி, வெள்ளம், வறட்சி, சுனாமி, போர், இடம்பெயர்வு, மீள்குடியேற்றம், யானைகளின் அச்சுறுத்தல் என பல்வேறு அசாதாரண சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.

தற்போதும் நிம்மதிப் பெருமூச்சு விடுமளவிற்கு இவரது நிலை இல்லை என்பதே கவலைக்குரிய விடயமாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்