முல்லைத்தீவு, அனுராதபுரம், மாத்தறையில் ”மீண்டும் சிந்தியுங்கள்” வேலைத்திட்டம்

முல்லைத்தீவு, அனுராதபுரம், மாத்தறையில் ”மீண்டும் சிந்தியுங்கள்” வேலைத்திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

21 Jun, 2016 | 7:49 pm

உங்களது வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதன் பிரதிபலனை உங்களுக்கு வழங்கியுள்ளனரா?

இது தொடர்பில் நியூஸ்பெஸ்டினால் முன்னெடுக்கப்படும் ”மீண்டும் சிந்தியுங்கள்” வேலைத்திட்டம் இன்றைய தினமும் முல்லைத்தீவு, அனுராதபுரம் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்த நியூஸ்பெஸ்ட் குழாத்தினர் முல்லைத்தீவு நகரில் இருந்து இன்றைய தினம் தமது பயணத்தை ஆரம்பித்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராமத்தில் மக்களது காணிகள் இன்னும் விடுவிக்கபடாத நிலையில், அவர்கள் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நியூஸ்பெஸ்ட் குழுவினர் கேட்டறிந்து கொண்டனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு கிராம மீனவர்கள், தாம் வெளி மாவட்ட மீனவர்களினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக நியூஸ்பெஸ்ட் குழாத்தினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தென்பகுதி மீனவர்கள் நாயாறு கிராமத்தில் குடிசையமைத்து சுமார் 450 படகுகள் மூலம் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர்.

இதேவேளை, தேர்தல் காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கென பிரதான பஸ்தரிப்பிடம் அமைத்துக் கொடுக்கப்படும் என வாக்கறுதி அளிக்கப்பட்ட போதிலும் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.

இன்றைய தினம் புதுக்குடியிருப்பு, மல்லிகைத் தீவு, வட்டுவாகல் ஆகிய பகுதிகளுக்கும் நியூஸ்பெஸ்ட் குழுவினர் சென்று மீண்டும் சிந்தியுங்கள் விழிப்புணர்வு திட்டம் தொடர்பில் விளக்கமளித்தனர்.

மாத்தறை மாவட்டத்திற்குச் சென்றுள்ள எமது குழுவினர், அத்துரலிய கந்தூவ, மாலிம்பட உள்ளிட்ட பல பகுதிகளுக்கு
சென்று மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

தேர்தலுக்கு முன்னர் தமது பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாகக் கூறியவர்கள் தற்போது தமது பிரச்சினைகள் தொடர்பில் கருத்திற்கொள்ளவில்லை என நில்வலா கங்கைக்கு அருகில் வாழும் மக்கள் தெரிவித்தனர்.

அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள எமது மற்றைய குழுவினர் தலாவ மற்றும் தம்புத்தேகம பிரதேச மக்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கேட்டறிந்தனர்.

இதன்போது, மக்களின் கருத்துக்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பதிவுசெய்யப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்