மாத்தறை நோக்கி பயணித்த பஸ் வண்டியில் போதைப்பொருளுடன் இருவர் கைது

மாத்தறை நோக்கி பயணித்த பஸ் வண்டியில் போதைப்பொருளுடன் இருவர் கைது

மாத்தறை நோக்கி பயணித்த பஸ் வண்டியில் போதைப்பொருளுடன் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2016 | 11:42 am

தெற்கு அதிவேக வீதியூடாக மாத்தறை நோக்கி பயணித்த பஸ் வண்டியில் போதைப்பொருளுடன் பயணம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை ராகுல வித்தியாலயத்திற்கு முன்னால் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வேளையில் சந்தேக நபர்களிடம் 42 பக்கற் போதைப்பொருள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பெலியத்தை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் இன்றைய தினம் மாத்தறை மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்