நிந்தவூரில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மருத்துவர் கைது

நிந்தவூரில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மருத்துவர் கைது

நிந்தவூரில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மருத்துவர் கைது

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2016 | 1:25 pm

அம்பாறை நிந்தவூரில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய நேற்று (20) இரவு சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுகயீனம் காரணமாக மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்ற போதே குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 52 வயதான நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 வயதான சிறுமி அம்பாறை வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சம்மாந்துறை பொலிஸாரினால் இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்