நாடு பூராகவும் உள்ள தபால் நிலையங்களில் தேங்கியுள்ள தபால்களை உரிய முறையில் விநியோகிக்க நடவடிக்கை

நாடு பூராகவும் உள்ள தபால் நிலையங்களில் தேங்கியுள்ள தபால்களை உரிய முறையில் விநியோகிக்க நடவடிக்கை

நாடு பூராகவும் உள்ள தபால் நிலையங்களில் தேங்கியுள்ள தபால்களை உரிய முறையில் விநியோகிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2016 | 7:56 am

மத்திய தபால் தலைமையகத்தில் 6 இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் இன்னும் தேங்கியிருப்பதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

நாளைய தினத்திற்குள் இந்த தபால்களை உரிய இடங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்த சங்கத்தின் பேச்சாளர் சிந்தன பண்டார தெரிவித்தார்.

தபால் ஊழியர்கள் கடந்த காலங்களில் மேற்கொண்ட வேலை நிறுத்தமே இவ்வாறு தபால்கள் மத்திய தபால் தலைமையகத்தில் தேங்கி நிற்பதற்கான காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் நாடு பூராகவும் உள்ள தபால் நிலையங்களில் தேங்கியுள்ள தபால்களை உரிய முறையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்