தேசிய வீடமைப்பு தின வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு முதலாவது கொடி அணிவிப்பு

தேசிய வீடமைப்பு தின வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு முதலாவது கொடி அணிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

21 Jun, 2016 | 8:10 pm

தேசிய வீடமைப்பு தின வாரத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள முதலாவது கொடி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அணிவிக்கப்பட்டது.

ஜூன் மாதம் 23ஆம் திகதி நினைவுகூரப்படவுள்ள தேசிய வீடமைப்பு தினத்தை முன்னிட்டு, அதற்கான கொடி இன்று ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அணிவிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஜனன தினமான ஜூன் 23 ஆம் திகதி தேசிய வீடமைப்புத் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்