கொழும்பு முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகே பிணையில் விடுதலை

கொழும்பு முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகே பிணையில் விடுதலை

கொழும்பு முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகே பிணையில் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2016 | 1:19 pm

கொழும்பு முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டது.

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டமை தொடர்பில் சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்ததன் பின்னரே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய காரணங்களின் கீழ் இந்த வழக்கிற்கு அமைவாக முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேவிற்கு பிணை வழங்குவதாக மேல்நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க அறிவித்துள்ளார்.

திலின கமகேயின் கடவுச் சீட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என மேல் நீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளுக்கு இணங்க தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகள் மற்றும் 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் திலின கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்