என் மீது வசை புராணம் பாடுவதை தமிழக முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும் – மு.கருணாநிதி 

என் மீது வசை புராணம் பாடுவதை தமிழக முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும் – மு.கருணாநிதி 

என் மீது வசை புராணம் பாடுவதை தமிழக முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும் – மு.கருணாநிதி 

எழுத்தாளர் Bella Dalima

21 Jun, 2016 | 8:25 pm

கச்சத்தீவு விவகாரத்தில் தன் மீது வசை புராணம் பாடுவதை தமிழக முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பில் மு.கருணாநிதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து தெளிவூட்டும் வகையில் அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ‘தி ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தான் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் மு.கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும், 1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சுதந்திர தின விழாவில் அவர் ஆற்றிய உரை இதுவரை எழுத்து வடிவிலே காணப்படுவதாகவும், அதனை செயற்படுத்த ஒரு சிறுதுளி கூட செயற்படவில்லை எனவும் மு.கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் தொடர்பில் சர்சையாக உள்ள கச்சத்தீவு, சர்வதேச கடல் எல்லைக்கு அமைய இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் முதல்வராக இருந்த போது கச்சத்தீவை மீட்பதற்குப் போராடி வாதாடியுள்ளதாகவும் மு.கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தி ஹிந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்