இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கல்கிஸ்ஸ பொலிஸ் விசேட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கல்கிஸ்ஸ பொலிஸ் விசேட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கல்கிஸ்ஸ பொலிஸ் விசேட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2016 | 9:28 am

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்கிஸ்ஸ பொலிஸ் விசேட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியை இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெண்ணொருவரிடம் 20,000 ரூபா இலஞ்சம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவரை கைது செய்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது.

காணி பிரச்சினை தொடர்பான முறைப்பாடொன்றில் குறித்த பெண்ணுக்கு சாதகமாக நடந்து கொள்ள குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி ஒரு இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டது.

இதற்கு முன்னரும் இந்த பொலிஸ் பொறுப்பதிகாரி 50,000 ரூபாவை கப்பமாக பெற்றுள்ளார்.

நேற்று மாலை தெஹிவளை பிரதேசத்தில் வைத்து மேலும் 20,000 ரூபாவை இலஞ்சமாக பெற முயன்ற போதே விசேட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்