இலங்கையின் முறிகள் தொடர்பில் நம்பிக்கை குறைவடைந்துள்ளதாக சர்வதேச முதலீட்டு ஆய்வு நிறுவனம் தெரிவிப்பு

இலங்கையின் முறிகள் தொடர்பில் நம்பிக்கை குறைவடைந்துள்ளதாக சர்வதேச முதலீட்டு ஆய்வு நிறுவனம் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

21 Jun, 2016 | 8:43 pm

இலங்கையின் முறிகள் தொடர்பிலான நம்பிக்கை குறைவடைந்துள்ளதாக இலங்கையின் பொருளாதாரம் தொடர்பிலான முன் அறிவித்தலை விடுக்கும் மூடிஸ் முதலீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் முன் அறிவித்தலின் படி இலங்கையின் பொருளாதாரம் எதிர்காலத்தில் பின்னடைவை எதிர்கொள்ளவுள்ளது.

சிங்கப்பூரைத் தளமாகக்கொண்ட, மூடிஸ் முதலீட்டு சேவை இலங்கையின் வெளிநாட்டு செலாவணி மற்றும் முறிகள் தரப்படுத்தலை B1 என தரப்படுத்தியுள்ளது.

இவ்வாறான பின்னடைவிற்கு முக்கியமான இரண்டு விடயங்களை மூடிஸ் முதலீட்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் வரி இலக்குகள் தொடர்ந்தும் பின்னடைவை எதிர்நோக்கும் என்ற எதிர்பார்ப்பு அதற்கான முதற் காரணமாகும்.

வரித்திருத்தம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமான அடைவுகள் தொடர்பில் அரசாங்கம் தற்போது வைத்துள்ள எதிர்பார்ப்பு குறைவடைந்துள்ளமை மற்றைய காரணமாகும்.

அரசாங்கத்தின் கடன்சுமை தொடர்ந்தும் அதிகரிக்கலாம் எனவும் மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனம் எதிர்வுகூறியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால், கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வற்கு இலங்கையின் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதனால் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களால் கிடைக்கவுள்ள நிதி போதுமானதாக அமையாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்