யாழில் இராணுவத்தினரின் தண்ணீர் பவுசர் மோட்டார் சைக்கிளுடன் மோதியது: பெண்ணொருவர் பலி

யாழில் இராணுவத்தினரின் தண்ணீர் பவுசர் மோட்டார் சைக்கிளுடன் மோதியது: பெண்ணொருவர் பலி

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2016 | 6:33 pm

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் தண்ணீர் பவுசர், மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

திருமண வீடு ஒன்றிற்குச் செல்வதற்காக தாயும், மகளும் மோட்டார் சைக்கிளில் சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேகமாக வந்த இராணுவ தண்ணீர் புவுசர் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற 58 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், 26 வயதான யுவதி காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – ரக்கா வீதி பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தினை எதிர்நோக்கினர்.

விபத்து தொடர்பில் இராணுவ டிரக்கை செலுத்திய ஒருவரிடமும் படை சிப்பாய் ஒருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் யாழ். தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்