யாழ். துரையப்பா விளையாட்டரங்கு ஜனாதிபதி தலைமையில் இன்று திறந்து வைப்பு

யாழ். துரையப்பா விளையாட்டரங்கு ஜனாதிபதி தலைமையில் இன்று திறந்து வைப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2016 | 1:30 pm

இந்திய அரசின் நிதி உதவியுடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (18) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இந்திய பிரதமர் ஶ்ரீமத் நரேந்திர மோடி காணொளியினூடாக, புதுடெல்லியிலிருந்து நேரடியாக இணைந்துக் கொண்டிருந்தார்.

இந்திய பிரதமர் வீடியோ காணொளி ஊடாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து துரையப்பா விளையாட்டரங்கில் உள்ள நினைவுப் பதாதையை திறந்துவைத்துள்ளனர்.

சர்வதேச யோகா தினமும் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அதனையொட்டிய நிகழ்வுகளும் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்