புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2016 | 1:22 pm

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றெட்பான பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸொன்றுடன் மோட்டார் சைக்கில் மோதி நேற்றிரவு 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் புதுகுடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்