தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பில் ஜெயலலிதா மீண்டும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பில் ஜெயலலிதா மீண்டும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பில் ஜெயலலிதா மீண்டும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2016 | 9:36 am

தமிழக மீனவர்களின் வாழ்வாதார விவகாரத்தில் நிலையான மற்றும் நடைமுறைகேற்ற தீர்வை மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடிதமொன்றினூடாக தமிழக முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுவதாகவும், அவர்கள் கைது செய்யப்படுவதாகவும் அந்த கடிதத்தல் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காங்கேசன்துறை கடற்பரப்பில் கோட்டைப்பட்டின மீனவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் தனது கடிதத்தில் எடுத்துகூறியுள்ளார்.

1974 மற்றும் 76 ஆம் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் காரணமாகவே பாரம்பரிய இடங்களில் மீன்பிடிப்பதில், மீனவர்கள் சிக்கலை எதிர்நோக்குவதாகவும் தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கையில் தடுத்து வைத்துள்ள இந்திய மீவர்களின் படகுகளை இலங்கை அரசு விடுவிப்பதற்கு மறுப்பு தெரிவிப்பது மிகுந்த கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மீனவப் பிரச்சினையில் தலையீடு செய்து உடனடியாக இலங்கை வசமுள்ள 93 படகுகளையும், 24 மீனவர்களையும் விடுதலை செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்