சாலாவ இராணுவ முகாம் தீ விபத்தில் சேதமடைந்த வீடுகளை புனர்நிர்மாணம் செய்ய இராணுவத்தினர் நடவடிக்கை

சாலாவ இராணுவ முகாம் தீ விபத்தில் சேதமடைந்த வீடுகளை புனர்நிர்மாணம் செய்ய இராணுவத்தினர் நடவடிக்கை

சாலாவ இராணுவ முகாம் தீ விபத்தில் சேதமடைந்த வீடுகளை புனர்நிர்மாணம் செய்ய இராணுவத்தினர் நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2016 | 1:14 pm

சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 331 வீடுகளை புனர்நிர்மாணம் செய்து, வீட்டு உரிமையாளர்களுக்கு கையளிப்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த வீடுகளில் மேலும் 81 வீடுகள் மாத்திரமே புனர்நிர்மாணிக்கப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.

சாலாவ நகரை மீள் கட்டியெழுப்பி, புதிய திட்டங்களினூடாக அதனை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான ஆலோசனைகளை மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

சாலாவ வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஜனாதிபதியால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை வழமைக்கு திரும்பும் வரை தேவையான அனைத்து நிவாரணங்களும், இந்த குழுவின் ஊடாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்