கொழும்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய 8 வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

கொழும்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய 8 வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

கொழும்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய 8 வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2016 | 10:39 am

கொழும்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய 8 வலயங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

குறிப்பாக நாட்டில் கொழும்பு மாவட்டத்திலேயே டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அத்தியட்சகர் ருவன் விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.

வௌ்ளவத்தை, பாமன்கடை, கிருலப்பனை, கிருல வீதி , நாரெஹென்பிட்டி, பொரளை, தெமட்டகொட மறறும் குருந்துவத்த ஆகிய பகுதிகளிலேயே அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பலத்த மழைக் காரணமாக வௌ்ளம் ஏற்பட்ட பகுதிகளிலும் டெங்கு நுளம்பு அதிகமாக பரவுவதாகவும் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பில் கட்டட நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளிலும் அதிகளவில் டெங்கு நுளம்பு பரவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் கடந்த 3 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்றுடன் நிறைவுப் பெறவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்