காலஞ்சென்ற சோமவங்ச அமரசிங்கவின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றன

காலஞ்சென்ற சோமவங்ச அமரசிங்கவின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றன

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2016 | 7:59 pm

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற சோமவங்ச அமரசிங்கவின் இறுதிக்கிரியைகள் பொரளை மயானத்தில் இன்று இடம்பெற்றன.

சோமவங்ச அமரசிங்கவின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த பத்தரமுல்ல இல்லத்திற்கு இன்று காலை முதல் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் சென்று, அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வீட்டில் இடம்பெற்ற மத அனுஷ்டானங்களின் பின்னர் பூதவுடலைத் தாங்கிய பேரணி ஆரம்பமாகியது.

குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் சோமவங்ச அமரசிங்கவின் இறுதிக்கிரியைகள் பொரளை மயானத்தில் இடம்பெற்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்