கண்கவர் நிறங்களில் கற்களைக் கொண்ட க்ளேசியர் நேஷனல் பார்க்கின் மெக்டொனால்ட் ஏரி (Photos)

கண்கவர் நிறங்களில் கற்களைக் கொண்ட க்ளேசியர் நேஷனல் பார்க்கின் மெக்டொனால்ட் ஏரி (Photos)

கண்கவர் நிறங்களில் கற்களைக் கொண்ட க்ளேசியர் நேஷனல் பார்க்கின் மெக்டொனால்ட் ஏரி (Photos)

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2016 | 4:12 pm

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில், கனடா எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது க்ளேசியர் நேஷனல் பார்க்.

இங்கு 700 ற்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதில் 200 ஏரிகள் 5 ஏக்கர் பரப்பளவு கொண்டவை. 12 ஏரிகள் 1000 ஏக்கர் பரப்பளவு உடையவை.

மலைக்கு அருகில் இருக்கும் ஏரிகளில் உள்ள தண்ணீர் தெளிவாக இருக்கின்றன. இங்கே மிகக் குறைவான வெப்பநிலை நிலவுவதால், மிதவை உயிரினங்களின் வளர்ச்சி தடைபட்டிருக்கிறது. இதனால், 30 அடி ஆழத்திலும் தரையைத் தெளிவாகப் பார்க்க முடியும்.

இவற்றில் சில ஏரிகளிலும் கரைகளிலும் விதவிதமான வண்ணக் கற்கள் கம்பளம் போல பரவியிருக்கின்றன.

மெக்டொனால்ட் ஏரியில் அடர் சிவப்பு, வெளிர் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள், ஊதா வண்ணங்களில் அழகான பளிங்குக் கற்கள் கண்களைக் கவர்கின்றன.

க்ளேசியர் நேஷனல் பார்க்கின் மிகப் பெரிய ஏரி மெக்டொனால்ட். 6,823 ஏக்கர் பரப்பளவுடையது. 15 கி.மீ. தூரத்துக்கு இந்த ஏரி பரந்து விரிந்திருக்கிறது. ஏரியின் ஆழம் 141 மீட்டர்.

ஒருகாலத்தில் க்ளேசியர் பார்க் இருக்கும் பகுதியில் உள்ள மலை பல வண்ணங்களில் இருந்திருக்கிறது. காலப் போக்கில் மலைப் பாறைகள் உடைந்து, ஆற்றில் அடித்து வரப்பட்டு, ஏரிகளில் தேங்கிவிட்டன.

சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்துக்குரிய இடமாக இந்த ஏரி இருக்கிறது.

1 (1) 1 17b039d00059731b402b3b81099a1671 18bd4b721375ad2d337671baed2d67b2-600x330 18985871-Colorful-rocks-under-the-water-of-McDonald-Creek-in-Glacier-National-Park-Montana-Stock-Photo fb3300ab88c7df97228c747d4670b73f Glacier-Lake-McDonald-Color-Stones_TamDanaRaynor_450 lake-mcdonald lake-mcdonald-colored-pebbles-810 lake-mcdonald-glaciernp-mtn049-11x17-copy


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்