உதய கம்மன்பிலவிற்கு எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியல்

உதய கம்மன்பிலவிற்கு எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2016 | 6:21 pm

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் உதய கம்மன்பில இன்று காலை கைது செய்யப்பட்டார்.

அவுஸ்திரேலிய பிரஜையொருவருக்கு சொந்தமான நிறுவனமொன்றின் 11 கோடி ரூபா பெறுமதியான பங்குகளை, போலி ஆவணங்களின் ஊடாக விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கம்மன்பில, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

எதிர்வரும் முதலாம் திகதி வரை உதய கம்மன்பிலவை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இதன்போது உத்தரவிட்டார்.

உதய கம்மன்பில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், கோட்டை நீதவான் நீதிமன்ற முன்றலில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பலர் கூடியிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்