இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஒருதொகை தங்கம் இந்தியாவில் பறிமுதல்

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஒருதொகை தங்கம் இந்தியாவில் பறிமுதல்

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஒருதொகை தங்கம் இந்தியாவில் பறிமுதல்

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2016 | 1:40 pm

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 8.76 கிலோகிராம் தங்கம் இந்தியாவின் காரைக்கால் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

காரைக்காலுக்கு அருகே நிரவி பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அரச பேருந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், 2.07 கோடி இந்திய ரூபா பெறுமதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நாகை, ஜூடிசியல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தி ஹிந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்