யாழ்ப்பாணத்தில் கலாநிதி அப்துல் கலாமின் உருவச்சிலை திறந்து வைப்பு

யாழ்ப்பாணத்தில் கலாநிதி அப்துல் கலாமின் உருவச்சிலை திறந்து வைப்பு

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2016 | 7:25 pm

மறைந்த இந்திய முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான கலாநிதி அப்துல் கலாமின் உருவச்சிலை யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

யாழ். பொது நூலகத்தில் நிர்மாணிக்கப்பட்ட அப்துல் கலாமின் உருவச்சிலையை வடமாகாண முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இந்திய துணைத்தூதுவர் வை.கே.சிங்ஹா ஆகியோர் திரை நீக்கம் செய்து வைத்தனர்.

அப்துல் கலாம் விஞ்ஞானி மாத்திரமன்றி, இந்திய நாட்டின் அரசியலிலும் தடம் பதித்தவர்.

அப்துல் கலாம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் விண்வெளி பொறியியலாளராகப் பணியாற்றியுள்ளார்.

அப்துல்கலாம் இந்தியாவின் 11 ஆவது குடியரசுத் தலைவராக 2002 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டுவரை பணியாற்றி மக்கள் மனங்களில் இடம்பிடித்தார்.

அந்நிய தேசத்தவரின் ஆசை வார்த்தைகளுக்கு அடிபணியாது, சொந்த நாட்டிற்கு அளப்பரிய சேவையாற்றிய கலாநிதி அப்துல் கலாம் அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இவரின் மகத்தான சேவையை கௌரவிக்கும் நோக்கில் இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்