பிரிட்டனில் பெண் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டுக்கொலை: ஒருவர் கைது

பிரிட்டனில் பெண் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டுக்கொலை: ஒருவர் கைது

பிரிட்டனில் பெண் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டுக்கொலை: ஒருவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2016 | 3:31 pm

பிரிட்டனில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸ் (41) நேற்று (15) சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இலண்டனில் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்க வேண்டுமா – வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதற்கான பொது வாக்கெடுப்பு, வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பிரிட்டன் முழுவதும் ஆளும் பழைமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சியினரும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்பது தொழிலாளர் கட்சியினரின் நிலைப்பாடாக உள்ளது.
வாக்கெடுப்பு நாள் நெருங்கி வருவதையொட்டி, பிரிட்டன் முழுவதும் அசாதாரணச் சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ், தனது தொகுதியான மேற்கு யாக்ஷைரில் அண்மைக்காலமாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். மேற்கு யாக்ஷைரில் உள்ள பிரிஸ்டால் நகரில் வியாழக்கிழமை காலை அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த இரு நபர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சண்டையை ஜோ காக்ஸ் விலக்க முயன்றதாகத் தெரிகிறது. அப்போது மோதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தனது கைத் துப்பாக்கியால் ஜோ காக்ஸை சரமாரியாக சுட்டுள்ளார். பின்னர், தன்னுடன் மோதலில் ஈடுபட்ட நபரையும் சுட்டுவிட்டு அவர் தப்பியோடியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஜோ காக்ஸ் உள்ளிட்ட இருவரை பொலிஸார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி ஜோ காக்ஸ் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 52 வயதுள்ள ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக மேற்கு யாக்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்