நிர்க்கதிக்குள்ளான இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தோனேஷியாவில் தரை இறங்குவதற்கு எதிர்ப்பு

நிர்க்கதிக்குள்ளான இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தோனேஷியாவில் தரை இறங்குவதற்கு எதிர்ப்பு

நிர்க்கதிக்குள்ளான இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தோனேஷியாவில் தரை இறங்குவதற்கு எதிர்ப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2016 | 1:21 pm

இந்தோனேஷியாவின் அச்சே கடற்பரப்பில் நிர்க்கதிக்குள்ளான இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களில் உள்ள பெண்கள் படகிலிருந்து அந்த நாட்டின் தரை இறங்குவதற்கு எதிராக எச்சரிக்கை துப்பாக்கி வேட்டு நடத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா நோக்கி சட்டவிரோத படகுப் பயணம் மேற்கொண்டிருந்த 44 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள், இந்தோனேஷியாவின் அச்சே கடற்பிராந்தியத்தில் படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக நிர்க்கதிக்குள்ளாகினர்.

கடந்த 11 ஆம் திகதி முதல் இந்தோனேஷிய அதிகாரிகளால் படகு கடலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் சுகவீனமுற்ற பிள்ளையொன்றுடன் தரையிறங்குவதற்கு அனுமதிக்குமாறு ஐந்து பெண்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆயினும், கடவுச் சீட்டுக்களோ அல்லது பயண ஆவணங்களோ இன்றி இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான எவரையும் தமது நாட்டிற்குள் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று இந்தோனேஷிய அதிகாரிகளை மேற்கொள்காட்டி அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை தரையிறங்குவதற்கும், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளை சந்திப்பதற்கும் அனுமதிக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் அச்சேவிலுள்ள பொது அமைப்பு என்பன கூட்டாக இந்தோனேஷிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.

இதேவேளை, படகிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் நிலை குறித்து தங்களுக்கு கவலையில்லை என்றும், அவர்களை சட்டவிரோத குடியேற்றவாசிகளாகவே கருதுவதாகவும் இந்தோனேஷிய குடிவரவுத்துறை தலைமை அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமையின் கீழ், புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தோனேஷிய கடலில் இருந்து வெளியேற்றப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் அவர்களின் பயண முடிவிடம் குறித்து அவர்களே தீர்மானிக்க வேண்டியுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்