நியூஸ்பெஸ்ட்டின் ”மீண்டும் சிந்தியுங்கள்” வேலைத்திட்டத்திற்கு சர்வமதத் தலைவர்கள் ஆசி

நியூஸ்பெஸ்ட்டின் ”மீண்டும் சிந்தியுங்கள்” வேலைத்திட்டத்திற்கு சர்வமதத் தலைவர்கள் ஆசி

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2016 | 9:30 pm

”மீண்டும் சிந்தியுங்கள்” வேலைத்திட்டம் ஊடாக நியூஸ்பெஸ்ட் குழுவினர் மீண்டும் மக்களை நேரில் சென்று சந்திக்கத் தயாராகியுள்ளனர்.

இந்தத் திட்டத்திற்கு இன்று சர்வமத தலைவர்கள் ஆசி வழங்கினர்.

மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரிடம் ‘மீண்டும் சிந்தியுங்கள்’ செயற்றிட்டம் தொடர்பான மூலப்பிரதி கையளிக்கப்பட்டது.

இதன்போது மகாநாயக்கர் நியூஸ்பெஸ்ட் குழுவினருக்கு ஆசி வழங்கினார்.

இதேவேளை, அஸ்கிரிய மகா விகாரைக்குச் சென்ற நியூஸ்பெஸ்ட் குழுவினர் மீண்டும் சிந்தியுங்கள் செயற்றிட்டம் தொடர்பான தகவல்களின் மூலப்பிரதியை அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரரிடம் கையளித்தனர்.

கொழும்பு பேராயர் இல்லத்திற்குச் சென்ற நியூஸ்பெஸ்ட்டின் மற்றுமொரு குழுவினர் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையிடம் ‘மீண்டும் சிந்தியுங்கள்’ செயற்றிட்டத்தின் மூலப்பிரதியைக் கையளித்தனர்.

நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானதேசிக பரமாச்சாரிய சுவாமிகளிடமும் மீண்டும் சிந்தியுங்கள் திட்டத்தின் மூலப்பிரதி நியூஸ்பெஸ்ட் குழுவினரால் கையளிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு நல்லை ஆதீன குரு முதல்வர் ஆசி வழங்கினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்