தேடு பொறியில் பாட்டி பயன்படுத்திய பணிவான வார்த்தைகள்: கூகுள் நிறுவனம் மகிழ்ச்சி

தேடு பொறியில் பாட்டி பயன்படுத்திய பணிவான வார்த்தைகள்: கூகுள் நிறுவனம் மகிழ்ச்சி

தேடு பொறியில் பாட்டி பயன்படுத்திய பணிவான வார்த்தைகள்: கூகுள் நிறுவனம் மகிழ்ச்சி

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2016 | 3:52 pm

ட்விட்டர் பயனாளரான பென் ஜோன் என்பவர் தனது பாட்டியின் மடிக்கணனியை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டிருந்த போது, பாட்டி தனது கூகுள் தேடு பொறியில் பயன்படுத்திய வார்த்தைகளைக் கண்டு ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்துவிட்டார்.

பாட்டி, கூகுளில் பயன்படுத்தியிருந்த பணிவான, பண்பான வார்த்தைகள் தான் அதற்குக் காரணம்.

அவர் கூகுளில் எது குறித்துத் தேடினாலும், வார்த்தைகளுக்கு முன்பாக “Please” மற்றும் இறுதியில் ”Thank You” என்றே குறிப்பிட்டுத் தேடியுள்ளார்.

பாட்டியின் இந்த தேடுதல்களை Screen Shot எடுத்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பென் ஜோன்.

இதனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த கூகுள் நிறுவனம், ”உங்களுடைய பணிவான தேடல் எங்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது” என்று மறு ட்வீட் செய்துள்ளது.

 

10727-1xxcf3l


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்