தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2016 | 8:45 am

தமது தொழிற்சங்க நடவடிக்கையை நேற்று (16) நள்ளிரவுடன் கைவிட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

தபால் திணைக்களத்திற்கான ஆட்சேர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு நேற்று (16) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 2 நாட்களில் மத்திய தபால் பரிமாற்றத்தில் குவிந்துள்ள கடிதங்களை விநியோகிப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் ஒன்றிணைந்த தபால் ஊழியர் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் கூறினார்.

கடந்த தினங்களில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ஏழரை இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் குவிந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்