ஜனாதிபதி நாளை யாழ். விஜயம்: பாதுகாப்பு தொடர்பில் ஆய்வு

ஜனாதிபதி நாளை யாழ். விஜயம்: பாதுகாப்பு தொடர்பில் ஆய்வு

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2016 | 10:32 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு, அவரின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று யாழ். மாவட்ட செலயகத்தில் இடம்பெற்றது.

புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள துரையப்பா விளையாட்டு அரங்கினைத் திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (18) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அரசாங்க அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடலின் போது பிரசன்னமாகியிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்