சாலாவ வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: ஜனாதிபதியால் விசேட குழு நியமனம்

சாலாவ வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: ஜனாதிபதியால் விசேட குழு நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2016 | 9:43 pm

கொஸ்கம – சாலாவ வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஜனாதிபதி விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலாவ ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு, விரைவில் நிவாரணம் வழங்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்கும் நோக்கில், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை வழமைக்கு திரும்பும் வரை தேவையான அனைத்து நிவாரணங்களும், இந்தக் குழுவின் ஊடாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி இங்கு பணிப்புரை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்