என்னுடன் எப்போதும் இரு: மீண்டும் இணையும் ஜெய், அஞ்சலி ஜோடி

என்னுடன் எப்போதும் இரு: மீண்டும் இணையும் ஜெய், அஞ்சலி ஜோடி

என்னுடன் எப்போதும் இரு: மீண்டும் இணையும் ஜெய், அஞ்சலி ஜோடி

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2016 | 4:08 pm

‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்குப் பிறகு ஜெய்யும் அஞ்சலியும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார்கள்.

புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கும் பேய்ப்படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

எங்கேயும் எப்போதும் படத்தின்போது இருவரைப் பற்றியும் கிசுகிசு எழுந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் இருவரும் காதல் செய்தியில் அடிபட்டுள்ளார்கள்.

புகழ் படம் வெளியானபோது பேசிய ஜெய், நானும் அஞ்சலியும் மீண்டும் நெருங்கிய நண்பர்களாகியுள்ளோம். இந்த உறவு காதலில் முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறினார்.

இந்நிலையில், அண்மையில் ட்விட்டர் வழியாக அஞ்சலிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார் ஜெய்.

அதற்குப் பதிலளித்த அஞ்சலி, ”நன்றி ஜெய். இதுதான் என்னுடைய சிறப்பான பிறந்தநாள். என்னுடன் எப்போதும் இரு,” என்று பதிலளித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்