எட்கா உடன்படிக்கை தொடர்பில் உண்மையான கருத்தாடல் நாட்டிற்குள் ஏற்பட வேண்டும் – வை.கே. சிங்ஹா

எட்கா உடன்படிக்கை தொடர்பில் உண்மையான கருத்தாடல் நாட்டிற்குள் ஏற்பட வேண்டும் – வை.கே. சிங்ஹா

எட்கா உடன்படிக்கை தொடர்பில் உண்மையான கருத்தாடல் நாட்டிற்குள் ஏற்பட வேண்டும் – வை.கே. சிங்ஹா

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2016 | 11:18 am

எட்கா உடன்படிக்கை தொடர்பில் உண்மையான கருத்தாடல் நாட்டிற்குள் ஏற்பட வேண்டும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா தெரிவித்துள்ளார்.

21 ஆம் நூற்றாண்டில் இந்திய – இலங்கை தொடர்புகள் எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று (16) நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோதே இந்திய உயர்ஸ்தானிகர் இதனை கூறினார்.

அயலவருக்கு முன்னுரிமை வழங்குதல் என்ற இந்திய பிரதமரின் கொள்கையில், இலங்கைக்கு தனியிடம் வழங்கப்பட்டுள்ளதாக வை.கே. சிங்ஹா சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் வளர்ச்சி, அயல் நாடுகளின் முன்னேற்றத்திலேயே தங்கியுள்ளதுடன், சுதந்திர உடன்படிக்கை பயனைப்பெற்று இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள் இந்திய சந்தைக்குள் பிரவேசிப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டியதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

இந்த உடன்படிக்கையின் மூலம் இலஙகைக்கு 60 வீதமான நிவாரணம் கிடைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய விஜயத்தில் ஈடுபட்டிருந்த போது பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான உடன்படிக்கை தொடர்பில் யோசனை முன்வைத்திருந்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட இந்தியா, முதலீடுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் தொடர்பில் பிராந்திய வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக வை.கே. சிங்ஹா மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்