அனர்த்தங்களினால் பாதிப்படைந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர் – இடர் முகாமைத்துவ நிலையம்

அனர்த்தங்களினால் பாதிப்படைந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர் – இடர் முகாமைத்துவ நிலையம்

அனர்த்தங்களினால் பாதிப்படைந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர் – இடர் முகாமைத்துவ நிலையம்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2016 | 7:37 am

சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிச் சம்பவம் மற்றும் வெள்ளப் பெருக்கினால் இடம்பெயர்ந்துள்ள சுமார் 6500 பேர் தொடர்ந்தும் பாதுகாப்பான முகாம்களில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் பொருட்டு முன்னெடுக்கப்பட்டிருந்த மதிப்பீட்டுப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் காப்புறுதி நிதியத்தின் ஊடாக சேதவிபரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுதவிர சாலாவ பகுதியில் சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் அனர்த்த முகாமைத்துவ தொடர்பாடல் நடவடிக்கைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 117 என்ற அவசர அழைப்பு இலக்கம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்