காணி கொள்வனவு தொடர்பான வழக்கு: யோஷித்த ராஜபக்ஸவுக்கு பிணை

காணி கொள்வனவு தொடர்பான வழக்கு: யோஷித்த ராஜபக்ஸவுக்கு பிணை

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2016 | 7:29 pm

கல்கிசை, மிஹிது மாவத்தையில் அமைந்துள்ள காணியொன்றை 501 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்தமை தொடர்பில் கல்கிசை நீதவான் நீதிமன்றம் யோஷித்த ராஜபக்ஸவுக்கு இன்று பிணை வழங்கியது.

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று நீதிமன்றதில் அவரை ஆஜர்படுத்திய சந்தர்ப்பத்திலேயே பிணை வழங்கப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யோஷித்த ராஜபக்ஸவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம், யோஷித்த ராஜபக்ஸ இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதன்போது கல்கிசை பிரதம நீதவான் மொஹமட் சஹாப்தீன், யோஷித்த ராஜபக்ஸவை தலா 10 இலட்சம் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவித்தார்.

ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 11 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணை மீண்டும் இடம்பெறவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்