அரச ஊழியர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரங்கள் அடுத்த வாரம் பெற்றுக்கொடுக்கப்படும்

அரச ஊழியர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரங்கள் அடுத்த வாரம் பெற்றுக்கொடுக்கப்படும்

அரச ஊழியர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரங்கள் அடுத்த வாரம் பெற்றுக்கொடுக்கப்படும்

எழுத்தாளர் Staff Writer

16 Jun, 2016 | 11:52 am

அரச ஊழியர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரங்கள் அடுத்த வாரம் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய அரச சேவையாளர்களுக்கு தலா 3 வாகன அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே குறிப்பிட்டுள்ளார்.

10 வருடங்களுக்கு ஒரு முறை வாகன அனுமதிப்பதத்திரம் வழங்கி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியர்கள் மற்றும் பொருளியலாளர்கள் உள்ளிட்ட அரச சேவையில் உள்ள பல்வேறு துறைசார் ஊழியர்களுக்கு இந்த வரப்பிரசாதம் கிட்டவுள்ளதாகவும் அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே மேலும் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்