அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2016 | 2:27 pm

காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்