வித்யா கொலை வழக்கு; சந்தேகநபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில்

வித்யா கொலை வழக்கு; சந்தேகநபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில்

வித்யா கொலை வழக்கு; சந்தேகநபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2016 | 1:19 pm

யாழ் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 12 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் சந்தேகநபர்கள் 12 பேரும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் மொஹமட் ரியாழ் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது மாணவி வித்யா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் மரபணு பரிசோதனை அறிக்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

புங்குடுதீவு மாணவி வித்தியா கடந்த வருடம் மே மாதம் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து நாடலாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்