வடக்கு, கிழக்கில் 14,000 ற்கும் மேற்பட்ட குடும்பங்களை மீளக்குடியமர்த்த வேண்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பு

வடக்கு, கிழக்கில் 14,000 ற்கும் மேற்பட்ட குடும்பங்களை மீளக்குடியமர்த்த வேண்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பு

வடக்கு, கிழக்கில் 14,000 ற்கும் மேற்பட்ட குடும்பங்களை மீளக்குடியமர்த்த வேண்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 Jun, 2016 | 8:47 pm

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை மீளக் குடியமர்த்த வேண்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

யாழ். தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 31 முகாம்களில் 1109 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைத் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவர்களில் 641 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தக் காணிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதற்கமைய, மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 65 ஏக்கர் காணியை யாழ். மாவட்ட செயலகம் அடையாளம் கண்டுள்ளது.

முகாம்களில் தங்கியுள்ள காணியற்ற 400 குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்காக இந்தக் காணியை அரசாங்கம் சுவீகரிப்பதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்