ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் தமக்கு ஜெயலலிதா உதவுவார் என கைதிகள் நம்பிக்கை

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் தமக்கு ஜெயலலிதா உதவுவார் என கைதிகள் நம்பிக்கை

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2016 | 1:32 pm

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் எழு பேரையும் விடுவிப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் நடவடிக்கை எடுப்பார் என, தண்டனை அனுபவிப்போரில் ஒருவரான ரவிச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை அரச மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகைதந்தபோதே அவர் இதனை குறிப்பிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ரவிச்சந்திரனின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததை அடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரி அவரின் தாயாரால் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிகிச்சைகளின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே தமது விடுதலை தொடர்பில் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என ரவிச்சந்திரன் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

இதேவேளை ராஜிவ்காந்தி கொலை தொடர்பில் தண்டனை அனுபவிக்கு நளினியால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாத நிலையில் நீதிபதி சத்தியநாராயணனால் இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு எதிர்வரும் 27 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்