ரஷ்யாவிற்கு 170,000 அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்தது ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம்

ரஷ்யாவிற்கு 170,000 அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்தது ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம்

ரஷ்யாவிற்கு 170,000 அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்தது ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம்

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2016 | 6:13 am

யூரோ 2016 கால்பந்து போட்டியில் ரஷ்ய ரசிகர்களின் நடத்தை காரணமாக அந்நாட்டுக்கு சுமார் 170,000 அமெரிக்க டொலர்களை ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் அபராதமாக விதித்துள்ளது.

விளையாட்டு அரங்கிற்குள் இனிமேல் வன்முறை நிகழ்ந்தால் அந்த அணி போட்டியில் இருந்து நீக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மார்செய்யில் ரஷ்ய மற்றும் இங்கிலாந்து ரசிகர்களுக்கு இடையில் வார இறுதியில் நடைபெற்ற மோதல்களை கிரம்ளின் கண்டித்துள்ளது.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகப்படுகின்ற பலரை வெளியேற்ற பிரான்ஸ் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

ஆனால், பிரான்சின் வடப் பகுதி நகரான லில்லுக்கு சிலர் செல்லுவதாக அச்சம் நிலவிவருகிறது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்