துருக்கி வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பு

துருக்கி வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பு

துருக்கி வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 Jun, 2016 | 7:08 pm

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள துருக்கி வெளிவிவகார அமைச்சர் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

ஜனாதிபதி வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் துருக்கியின் முதலீடுகளை மேலும் அதிகரிப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

எதிர்காலத்தில் இலங்கை பொருளாதார ரீதியில் வெற்றி இலக்குகளை அடைவதற்கு தமது அரசாங்கம் முடியுமான விதத்தில் உதவிகளைப் பெற்றுத்தருமென துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவுலட் கௌசோக்லு (Mevlut Cavusoglu) இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, துருக்கி வெளிவிவகார அமைச்சர் இன்று பிற்பகல் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

பின்னர் அவர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்