சீனி ஏற்றி வந்த கொள்கலனில் கொக்கேன்: சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சீனி ஏற்றி வந்த கொள்கலனில் கொக்கேன்: சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

15 Jun, 2016 | 9:34 pm

சீனி ஏற்றிவந்த கொள்கலனொன்றில் இருந்து மீட்கப்பட்ட கொக்கேன் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் 7 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

25 வருட காலமாக புறக்கோட்டையில் சீனி இறக்குமதி செய்து வந்த வர்த்தகர் ஒருவர் பிரேசிலில் இருந்து கொண்டு வந்த சீனி ஏற்றிய கொள்கலனொன்றில் இருந்து 85 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த போதைப்பொருள் 255 கோடி ரூபா பெறுமதியானது என அதிகாரிகள் கூறினர்.

சீனி இறக்குமதி செய்த உள்நாட்டு நிறுவனத்தின் பணிப்பாளர், முகாமையாளர் மற்றும் எழுதுவினைஞர் ஆகியோர் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்