சாலாவ இராணுவ முகாம் வெடிப்பினால் பாதிக்கப்பட்ட மேலும் 263 வீட்டு உரிமையாளர்களுக்கு நட்ட ஈடு

சாலாவ இராணுவ முகாம் வெடிப்பினால் பாதிக்கப்பட்ட மேலும் 263 வீட்டு உரிமையாளர்களுக்கு நட்ட ஈடு

சாலாவ இராணுவ முகாம் வெடிப்பினால் பாதிக்கப்பட்ட மேலும் 263 வீட்டு உரிமையாளர்களுக்கு நட்ட ஈடு

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2016 | 11:29 am

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் எற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மேலும் 263 வீட்டு உரிமையாளர்களுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சேதமடைந்த 263 வீடுகளுக்கும் தலா 50,000 ரூபா வழங்கப்பட உள்ளதாக சீதாவக்க பிரதேச செயலாளர் எம்.எம்.எஸ்.கே பண்டார யாப்பா தெரிவித்துள்ளார்

சீதாவக்க பிரதேச செயலகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள பெயர்பட்டியலுக்கு அமைய நட்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும் பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பெயர்பட்டியலிலுள்ளவர்களின் விபரங்கள் கிராம சேவையாளர்கள், இணைப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரூடாக மக்களுக்கு அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பினால் பாதிக்கப்பட்ட சுமார் 92 வீடுகளுக்கான நட்டஈட்டு பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சீதாவக்க பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிப்படைந்த வீடுகள் தொடர்பில் தொடர்ந்தும் மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்
அவர் தெரிவித்துள்ளார்.

மதீப்பீட்டாளர்களின், மதீப்பீட்டு நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் முழுமையான சேதவிபரங்கள் தொடர்பில் அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் மதீப்பீட்டு பணிகளின் நிறைவில் பாதிக்கப்பட்டோருக்கான உரிய நட்டஈடு வழங்கப்படும் எனவும் சீதாவக்க பிரதேச செயலாளர் எம்.எம்.எஸ்.கே.பண்டார யாப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்