காணாமல் போனோர் விசாரணை ஆணைக்குழு விரைவில் கலைக்கப்படும்

காணாமல் போனோர் விசாரணை ஆணைக்குழு விரைவில் கலைக்கப்படும்

காணாமல் போனோர் விசாரணை ஆணைக்குழு விரைவில் கலைக்கப்படும்

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2016 | 9:47 am

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவை அடுத்த மாதம் 15 ஆம் திகதியுடன் கலைக்கப்படவுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரனகம தெரிவித்துள்ளார்.

இதுவரை காலம் ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்த பின்னர் எவ்வித தகவல்களும் இன்றி போயுள்ளவர்கள் குறித்தும் கடந்த காலங்களில் அவர்களின் உறவினர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் கட்டம் கட்டமாக காணாமல் போனோர் தொடர்பில் ஆணைக்குழுவினால் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

பகிரங்க அமர்வுகளின் ஊடாக நடத்தப்பட்ட சாட்சி பதிவுகளின் போது காணாமல் போனோரின் உறவினர்கள் புதிய முறைப்பாடுகளையும் முன்வைத்திருந்தனர்.

இதனிடையே காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு புதிய அலுவலகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு அரசாஙகம் தீர்மானித்துள்ளதாகவும் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரனகம மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்