களனி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினால் நடத்தப்பட்ட பேரணி மீது  கண்ணீர்ப்புகை பிரயோகம்

களனி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினால் நடத்தப்பட்ட பேரணி மீது  கண்ணீர்ப்புகை பிரயோகம்

எழுத்தாளர் Bella Dalima

15 Jun, 2016 | 4:11 pm

களனி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினால் நடத்தப்பட்ட பேரணி மீது கொழும்பு செரமிக் சந்தியில் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

வீதித் தடைகளை மீறி முன்னேற முற்பட்டதை அடுத்து, மாணவர்களின் பேரணியைக் கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டதாக கொழும்பு பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இதேவேளை, களனி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் பேரணி, செரமிக் சந்தியூடாக ஜனாதிபதி செயலகம் நோக்கிப் பயணிப்பதற்கு தடைவிதித்து கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்