கலாபவன் மணியின் இரத்தத்தில் 45 மில்லிகிராம் மெதனோல்; பரிசோதனையில்அதிர்ச்சித் தகவல்

கலாபவன் மணியின் இரத்தத்தில் 45 மில்லிகிராம் மெதனோல்; பரிசோதனையில்அதிர்ச்சித் தகவல்

கலாபவன் மணியின் இரத்தத்தில் 45 மில்லிகிராம் மெதனோல்; பரிசோதனையில்அதிர்ச்சித் தகவல்

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2016 | 12:32 pm

கலாபவன் மணியின் உடலில் மெதனோல் என்ற இரசாயன பொருள் 45 மில்லி கிராம் அளவில் கலந்திருப்பதாக இரசாயன பரிசோதனையில் புதிய தகவல் வெளிவந்துள்ளது.

பிரபல மலையாள நடிகர் கலாபவன்மணி கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்தார். தனியார் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மரணம் மலையாள திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கலாபவன்மணி மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியதால் இந்த விவகாரத்தில் பரபரப்பும் ஏற்பட்டது.

பிரேத பரிசோதனை முடிவில் கலாபவன்மணி உடலில் நச்சுத்தன்மை வாய்ந்த பொருள் கலந்ததால் மரணம் நேர்ந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் கலாபவன்மணியின் கல்லீரல், சிறுநீரகம், இரத்த மாதிரி உள்ளிட்ட உடல் உறுப்புகள் ஹைதராபாத்தில் உள்ள மத்திய ஆய்வுக்கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதன் முடிவு தற்போது வௌியாகியுள்ளது.

அந்த அறிக்கையில் கலாபவன்மணியின் உடலில் மெதனோல் என்ற இரசாயன பொருள் 45 மில்லி கிராம் அளவில் கலந்திருப்பது தெரியவந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்ததாகவும் மது அருந்தும்போது இந்த அளவுக்கு மெதனோல் உடலில் கலக்க வாய்ப்பு இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கலாபவன் மணிக்கு யாரோ மதுவில் மெதனோலை கலந்து கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் மீண்டும் ஏற்பட்டுள்ளதால் அந்த கோணத்தில் விசாரணை அரம்பிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்