கடந்த 50 வருடங்களில் மே மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகம் – நாசா

கடந்த 50 வருடங்களில் மே மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகம் – நாசா

கடந்த 50 வருடங்களில் மே மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகம் – நாசா

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2016 | 12:18 pm

உலகம் முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

சர்வதேச வானிலை மைய நிறுவனம் (டபிள்யூஎம்.ஓ.) சர்வதேச அளவில் கடந்த ஆண்டு நிலவிய தட்ப வெப்ப நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நாசாவின் தட்ப வெப்பநிலை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது வெளியிடப்பட்டது.

அதன்படி 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்த மே மாதத்தில்தான் கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பருவ நிலை மாற்றம் காரணமாக வடபுலத்தில் உள்ள ஆர்டிக்கடல் பகுதியில் முன்னதாகவே ஐஸ்கட்டிகள் உருகியதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டத்தில் வழமைக்கு மாறாக அதிக மழை பெய்தது. அதுதவிர வருகின்ற 2061 முதல் 2080 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் அண்டார்டிகாவை தவிர மற்ற பகுதிகளில் இதைவிட அதிக அளவு வெயிலுடன் கூடிய காலநிலை நிலவும் என்று மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.

வெப்பம் அதிகரிப்பால் சுகாதார சீர்கேடு, பயிர்கள் அழிவு, கடுமையான வறட்சி உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனவே, காபன் வெளியேற்றத்தை குறைத்து தட்பவெப்ப நிலையை சீரமைக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்