பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வலுவான காரணங்களில்லை!

பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வலுவான காரணங்களில்லை!

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2016 | 8:33 pm

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவருவதற்கு வலுவான காரணங்கள் எவையுமில்லையென பாராளுமன்ற விவகார செயற்குழு தீர்மானித்துள்ளது.

இதனை சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

55 பில்லியன் ரூபாவிற்கான குறை நிரப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் பரிந்துரை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் விஜயதாச ராஜபக்ஸ ஆகியோர் அடங்குகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்